கூலி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல் முறையாக நடிக்கவிருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். மேலும் அனிருத் இசையமைக்கிறார்.
சமீபத்தில் தான் இப்படத்தின் டைட்டில் டீசர் வீடியோ வெளிவந்து மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், அபிராமி, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
ரஜினிக்காக மாற்றாம்
மேலும், ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை சென்னை மற்றும் ஹைதராபாத் என இரண்டு இடங்களில் மொத்த படத்தையும் படமாக்கி முடிக்க திட்டமிட்டு இருக்கிறாராம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
அதோடு இப்படத்தில் அதிகப்படியான சண்டைக் காட்சிகள் இருந்தாலும் தற்போது ரஜினிக்கு 73 வயது ஆகிறது என்பதால் அவரை அதிகப்படியாக வறுத்தி எடுக்காமல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சண்டைக் காட்சிகளை அதிரடியாக படமாக்கவும் அவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.