விஷ்ணு விஷால் – ராம்குமார்
விஷ்ணு விஷால் – ராம்குமார் கூட்டணியில் உருவாகி கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ராட்சசன்.
இதற்கு முன் இந்த கூட்டணியில் வெளிவந்த முண்டாசுப்பட்டி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து கொடுத்த திரைப்படம் தான் இது.
சஸ்பென்ஸ் திரில்லர் கதைக்களத்தில் அமைத்திருந்த இப்படம் நம் அனைவரையும் கவர்ந்தது. தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படைப்புகளில் ராட்சசன் படமும் ஒன்று என சொன்னால் கூட மிகையாகாது.
ராட்சசன் வெற்றியை தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஷ்ணு விஷால் – இயக்குனர் ராம் குமார் தற்போது கூட்டணி அமைத்துள்ளனர். இப்படத்தை சத்யஜோதி தியாகராஜன் தயாரித்து வருகிறார்.
ராட்சசன் 2?
இப்படம் Fantasy கதைக்களத்தில் உருவாகி வருகிறது என கூறப்பட்ட நிலையில், தற்போது வெளிவந்துள்ள தகவல் என்னவென்றால், இது ராட்சசன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தானாம். ராட்சசன் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தான் தற்போது நடைபெற்று வருகிறது என பேசப்படுகிறது.
[N54VO ]
இந்த தகவல் ராட்சசன் 2 திரைப்படத்தின் எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் கூட, இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.