நடிகர் விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அப்படி விஜய்க்கு சினிமா துறையில் இருக்கும் பலரும் ரசிகர்கள்.
நடிகர் ராதாரவி எப்போது பேட்டி கொடுத்தாலும் விஜய்யை பற்றி உயர்வாக பேசுபவர். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னை விஜய்யின் மேனேஜர் அசிங்கப்படுத்திவிட்டார் என குற்றம் சாட்டி இருக்கிறார்.
கூட்டத்தை கூட்டிட்டு வராதீங்க
நடிகர் ராதாரவியின் பேரன் தீவிர விஜய் ரசிகராம். தளபதி விஜய் உடன் போட்டோ எடுக்க வேண்டும் என பல வருடங்களாக கேட்டுக்கொண்டிருந்தாராம். அதனால் சர்க்கார் படத்தில் விஜய் உடன் நடித்தபோது அதற்காக விஜய்யிடம் அனுமதி கேட்டிருக்கிறார் ராதாரவி.
அவரும் வர சொன்னதால் தனது குடும்பத்தை விஜய்யை சந்திக்க அழைத்து சென்று இருக்கிறார். அங்கு ஷூட்டிங் முடியும் வரை காத்திருந்து விஜய் மேக்கப் களைத்த பின் சந்தித்து போட்டோ எடுத்து கொண்டு கிளம்பினார்களாம்.
அதன் பின் ஒரு முறை விஜய்யை சந்திக்க வேண்டும் என விஜய்யின் மேனேஜரிடம் ராதாரவி கேட்டபோது, “நீங்க வந்து சந்திக்கலாம். ஆனால் முன்பு போல கூட்டத்தை கூட்டிட்டு வராதீங்க” என சொன்னாராம்.
அது ராதாரவிக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நான் பார்க்கவே வரல என கோபமாக கூறி போனை கட் செய்துவிட்டாராம்.
ராதாரவி இது பற்றி சமீபத்திய பேட்டியில் வருத்தமாக கூறி இருக்கும் நிலையில் விஜய் தரப்புக்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.