சல்மான் கானின் செயல்
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் நேற்று வெளிவந்த திரைப்படம் சிக்கந்தர். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார்.
இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று மோசமான விமர்சனங்களை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளிவந்த ஒரு வீடியோவில், நடிகர் சல்மான் கான் நடிகை ராஷ்மிகா மந்தனாவை காரில் இருந்து வெளியே இழுத்து போட்டோக்கு போஸ் கொடுக்க அழைத்தது போல் உள்ளது.
வெளுத்து வாங்கும் ரசிகர்கள்
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்களும், ராஷ்மிகாவின் ரசிகர்களும் சல்மான் கானை கடுமையான விமர்சித்து வருகிறார்கள்.
தனது மகள் வயது உள்ள ஒரு பெண்ணிடம் இப்படியா நடந்துகொள்வது என சல்மான் கானின் இந்த செயலை கண்டித்தும் வருகிறார்கள். மேலும் இந்த செயலை ராஷ்மிகா ஏன் பொறுத்து கொள்கிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதோ அந்த வீடியோ..
This is basic difference between #SRK and salman. #Salman has no basic manners and no idea how to behave with women.
No wonder he remained unmarried his whole life.pic.twitter.com/M54VOZwuCw
— Cheemrag (@itxcheemrag) March 31, 2025