ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ஹிந்தியில் சிக்கந்தர் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். சல்மான் கான் ஹீரோவாக நடிக்க மிகப்பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கப்பட்டு இருக்கிறது.
இன்று சிக்கந்தர் படம் ரிலீஸ் ஆகும் நிலையில் ரசிகர்கள் படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
முழு படமும் HDயில் லீக்
இந்நிலையில் தற்போது சிக்கந்தர் முழு படமும் பைரஸி தளங்களில் லிக் ஆகி இருக்கிறது. அது ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
படத்தின் ரிலீசுக்கு முன்பே இப்படி நடந்திருப்பது ஷாக் கொடுத்து இருக்கிறது. Piracyல் படத்தை பார்த்து யாரும் அதை ஊக்குவிக்க வேண்டாம் என சினிமா துறையினர் பலரும் சமூக வலைத்தளங்களில் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.