சினிமாவில் ஒரு முன்னணி நடிகர் நடித்த படம் என்றாலே பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே எழும். இந்த நிலையில்,பாலிவுட் சினிமாவில் ஏழு முன்னணி நட்சத்திரங்களை வைத்து ஒரு படம் உருவாக இருந்தது. ஆம், தயாரிப்பாளரும் இயக்குனருமான கரன் ஜோகர் 2020 – ம் ஆண்டு தக்த் என்ற படத்தை இயக்கவிருந்தார்.
மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட சிம்மாசன பிரச்சனையை மையமாக வைத்து திரைக்கதையை இயக்குனர் அமைத்திருந்தார்.மேலும், ரூ. 250 கோடி பட்ஜெட்டில் முன்னணி நட்சத்திரங்களான விக்கி கவுஷல், ரன்வீர் சிங், கரீனா கபூர், ஆலியா பட், ஜான்வி கபூர், அனில் கபூர் ஆகியோரை வைத்து எடுக்கவிருந்த படம் தான் தக்த்.
ஆனால், அந்த நேரத்தில் கொரோனாவால் லாக்டவுன் போடப்பட்டு படத்தின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. அதுமட்டுமில்லாமல் அந்த நேரத்தில் தான் சுஷாந்த் சிங் தற்கொலை மற்றும் அதை தொடர்ந்து வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் குறித்து பெரும் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது.
சூழல், இவ்வாறு இருக்க தக்த் படத்திலும் வாரிசு நட்சத்திரங்கள் நடிப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு கேலி கிண்டல்களுக்கு இயக்குனர் ஆளானார். அதனால் அப்போது தக்த் படத்தை கரண் ஜோகர் கைவிட்டார். இதனால் தக்த் படம் ஷூட்டிங் முழுமை அடையாமல் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.