வயநாடு
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த இயற்கை பேரிடரில் இருந்து மீண்டு கேரளாவிற்கு மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் நிவாரண உதவி வழங்கி வருகின்றனர். அதே போல் திரையுலகை சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.
நிதியுதவி செய்த பிரபலங்கள்
நேற்று நடிகர் விக்ரம் ரூ. 20 லட்சம் நிதியுதவி வழங்கியிருந்தார். இதை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக தகவல் வெளிவந்தது.
ரூ. 50 லட்சம் நிவாரண நிதி
இந்த நிலையில், நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி மற்றும் நடிகை ஜோதிகா ஆகிய மூவரும் கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்காக ரூ.50 லட்சத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.