சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் TRP-யில் நம்பர் 1 சீரியல் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் கதைக்களம்படி தற்போது முத்துவிடம் இருக்கும் செல்போனில் உள்ள மீனாவின் தம்பி குறித்த ஆதாரத்தை எடுக்க ரோகினி போராடி வருகிறார்.
அந்த ஆதாரத்தை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தினால் தான், சிட்டியிடம் இருந்து தனக்கு உதவி கிடைக்கும் என்பதால் முத்து செல்போனில் இருக்கும் வீடியோ ஆதாரத்தை தனது தோழியுடன் இணைந்து தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்.
அடுத்த நடக்கவிருப்பது
நவராத்திரி கொலு நிகழ்ச்சி வீட்டில் நடந்துவரும் நிலையில், எப்படியாவது முத்துவின் செல்போனை எடுத்துவிடவேண்டும் என நினைத்த ரோகினி, ஒருவழியாக முத்துவின் போனை கைப்பற்றிவிட்டார். போனில் உள்ள வீடியோ ஆதாரத்தை எடுத்து அனைவருக்கும் தெரியப்படுத்தும் நேரத்தில், ரோகினியின் தோழி, இதை செய்யவேண்டாம் என தடுக்கிறார்.
இந்த சமயத்தில் திடீரென முத்துவும் மீனாவும் அங்கு வந்து ரோகினியின் கையில் இருக்கும் போனை எதிர்ச்சியாக தட்டிவிட செல்போன் கீழே விழுகிறது. இதன்பின் என்ன நடக்கப்போகிறது என நாளை ஒளிபரப்பாகவுள்ள எபிசோடில் பொறுத்திருந்து பார்ப்போம்.