ரோபோ ஷங்கர்
திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ரோபோ ஷங்கர். அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
தொலைக்காட்சியில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள ரோபோ ஷங்கருக்கு, இந்திரஜா ஷங்கர் என ஒரு மகள் இருக்கிறார்.
இவர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் அவருடைய சொந்த மாமன் கார்த்திக் என்பவருடன் இந்திரஜா ஷங்கருக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.
இதன்பின் இருவரும் ஜோடியாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அப்போது அந்த நிகழ்ச்சியில் இந்திரஜா அவர் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருந்தார்.
புகைப்படங்கள்
இந்நிலையில், இந்திரஜாவுக்கு நேற்று கோலாகலமாக வளைகாப்பு நடைபெற்றுள்ளது. அந்த விழாவிற்கு பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இந்திரஜா அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,