சூப்பர்ஸ்டார் ரஜினியின் லிங்கா படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. அந்த படம் பிளாப் ஆனதால் அதற்கு பிறகு தென்னிந்திய சினிமாவே வேண்டாம் என பாலிவுட்டில் மட்டும் நடித்து வருகிறார்.
நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள் தான் சோனாக்ஷி சின்ஹா என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நடிகர் சத்ருஹன் சின்ஹா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு எம்பி ஆகி இருக்கிறார்.
சோனாக்ஷி திருமணம்..
நடிகை சோனாக்ஷி தற்போது ஜாகீர் இஃபால் என்பவரை காதலித்து வருகிறார், அவர்களுக்கு வரும் ஜூன் 23ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவி வருகிறது. Double XL என்ற படத்தில் ஒன்றாக நடித்த அவர்களாக காதலித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம் பற்றி பரவும் செய்திகளுக்கு பதில் அளித்த சோனாக்ஷி ‘அது உங்களுக்கு தேவை இல்லாதது’ என பதில் கொடுத்து இருக்கிறார்.
அவரது அப்பா எம்பி நடிகர் சத்ருஹன் சின்ஹாவை கேட்டால், “திருமணமா.. எனக்கு தெரியாது.. சோனாக்சி திருமணம் செய்தால் நான் ஆசிர்வதிப்பேன்” என கூறி இருக்கிறார்.
அதனால் அப்பாவிடமே சொல்லாமல் சோனாக்ஷி திருமணம் செய்கிறாரா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.