லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்சில்
கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள் தற்போது LCU – லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்சில் இணைந்துள்ளது. விக்ரம் படத்தில் கைதி படத்தை இணைத்து தனது LCU பயணத்தை துவங்கினார் லோகேஷ்.
அதுமட்டுமின்றி விக்ரம் படத்திலேயே புதிதாக ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தினார். அதுவும் சூர்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்தது இன்னும் பலமடங்கு மிரட்டலாக அமைந்தது.
இதை தொடர்ந்து வெளிவந்த தளபதி விஜய்யின் லியோ படத்திலும் கைதி படத்தில் வந்த நெப்போலியன் கதாபாத்திரத்திரம் மற்றும் கமலின் விக்ரம் கதாபாத்திரத்தையும் கொண்டு வந்த LCU-வில் இணைத்தார்.
LCU-வில் புதிய படம்
இந்த நிலையில், அந்த வரிசையில் தற்போது ராகவா லாரன்ஸ் தற்போது LCU-வில் இணைந்துள்ளார். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் படம் தான் பென்ஸ்.
இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி கதையும் லோகேஷ் கனகராஜுடையது தானாம். ஆகையால், ராகவா லாரன்ஸின் பென்ஸ் திரைப்படமும் லோகேஷ் கனகராஜின் LCU-வில் தான் இணைகிறது என தகவல் வெளியாகியுள்ளது.