Saturday, March 22, 2025
Homeஇலங்கைவடக்கில் இனப்படுகொலை நடந்ததென படலந்த அறிக்கையை முன்னுதாரணம் காட்டுவார்கள்

வடக்கில் இனப்படுகொலை நடந்ததென படலந்த அறிக்கையை முன்னுதாரணம் காட்டுவார்கள்


வடக்கில் இனப்படுகொலை நடந்தது எனக்கூறி அது தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஆணைக்குழுவொன்றை தமிழ் டயஸ்போராக்கள் கோரக்கூடும் என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இலங்கை படையினர் போர்க்குற்றம் இழைக்கவில்லை. பரணகம குழுவில் இருந்த சர்வதேச நிபுணர்களும் இந்த விடயத்தை குறிப்பிட்டிருந்தனர். இனப்படுகொலையும் நிகழ்த்தவில்லை. உலகிலேயே பெருமளவில் பணயக்கைதிகளை மீட்டு போரை முடித்த இராணுவம்தான் எமது நாட்டில் உள்ளது.

எனவே, போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் எமக்குள்ள குற்றச்சாட்டுகள் போலியானவையாகும். எனினும், குற்றச்சாட்டுகள் உண்மையென்பதை காண்பிப்பதற்கு, படலந்த அறிக்கை பயன்படுத்தக்கூடும்.

படலந்த அறிக்கை இங்கு வெளியாவதால், வடக்கில் இனப்படுகொலை நடந்தது எனக்கூறி அது தொடர்பில் டயஸ்போராக்கள் விசாரணை கோரலாம். எனவே, ஜெனிவா மாநாட்டில் பட்டலந்த அறிக்கை எதிரொலிக்கக்கூடும்.” – என்றார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments