பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்குகள், மயில்கள் மற்றும் அணில்கள் குறித்து சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் அறிக்கை நாளை (28) வெளியிட எதிர்பார்ப்பதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்தார்.
விவசாயப் பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வன உயிரினங்கள் பற்றிய தேசிய கணக்கெடுப்புக்கு அமைவாக, அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த இதனை தெரிவித்தார்.