Thursday, March 20, 2025
Homeசினிமாவரலட்சுமி குறித்து தவறாக பேசினால்.. மனம் திறந்த ராதிகாவின் மகள் ரயான்

வரலட்சுமி குறித்து தவறாக பேசினால்.. மனம் திறந்த ராதிகாவின் மகள் ரயான்


ராதிகா

நடிகை ராதிகா, தமிழ் சினிமாவில் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர். வெள்ளித்திரை, சின்னத்திரை என ஒரு கலக்கு கலக்கியவர், இப்போது அரசியலிலும் ஈடுபட்டு இருக்கிறார், அதிலும் அவர் வெற்றி காண்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல மொழிகளில் நடித்துள்ள இவர் தயாரிப்பாளராகவும் சாதித்து வருகிறார்.

ராதிகா, சரத்குமாரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ரயான் என்ற மகள், ராகுல் என்கிற மகன் இருக்கிறார்கள். சரத்தின் முதல் மனைவியோடும், வரலட்சுமியோடும் ராதிகாவுக்கு நல்லவிதமான உறவு இருந்து வருகிறது.

ரயான் 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் ராதிகாவின் மகள் ரயான் தன் குடும்பம் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” வரலட்சுமியின் திருமணத்தில் எனது அம்மா ராதிகா மிகவும் ஈடுபாடாக இருந்ததை கண்டு பலர் அவருக்கு பெரிய மனசு என்று கூறினார்கள். ஆனால் இது அம்மாவின் இயல்பு.

வரலட்சுமி குறித்து தவறாக பேசினால்.. மனம் திறந்த ராதிகாவின் மகள் ரயான் | Actress Raadhika Daughter About Family

நானும், வரலட்சுமியும் ரொம்பவே க்ளோஸாக இருப்போம். வரலட்சுமி திருமணத்திற்கு பின் பலமுறை கணவருடன் வந்துள்ளார். எனது குடும்பம் குறித்து யாராவது தவறாக பேசினால் நானும் அம்மாவும் அவர்களை எளிதாக விட மாட்டோம்” என்று கூறியுள்ளார்.     

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments