சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். அவரது தயாரிப்பு நிறுவனம் மூலமாக மற்ற சின்ன நடிகர்களை வைத்து படம் தயாரிக்கவும் செய்கிறார். தற்போது சூரி நடிப்பில் அவர் தயாரித்து இருக்கும் கொட்டுக்காளி என்ற படத்தை தயாரித்து இருக்கிறார்.
அந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் சிவகார்த்திகேயன் பேசியது வைரலாகி இருக்கிறது.
நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என சொல்லமாட்டேன்
“யாரையும் கண்டுபிடுச்சி.. நான் தான் வாழ்க்கை கொடுத்தேன் என நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கிட்டாங்க ‘நான் தான் வாழ்க்கை கொடுத்தேன்’ என. அந்த மாதிரி ஆள் நான் இல்லை” என சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார்.
அவர் யாரை சொல்கிறார் என இது பற்றி தற்போது இணையத்தில் பேச்சு எழுந்திருக்கிறது.
#Sivakarthikeyan‘s Speech at #Kottukkaali Trailer Launch event
That ” வாழ்க்கை கொடுத்தேன்” portion 👀
pic.twitter.com/C5tHbRmbK3— Prakash Mahadevan (@PrakashMahadev) August 13, 2024