குஷ்பு
தமிழ் சினிமாவில் 1988ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை குஷ்பு.
ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு, கார்த்தி, நெப்போலியன் என நிறைய முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், விஜய்யின் வாரிசு படம் குறித்தும், தனது காட்சிகள் டெலிட் ஆனது பற்றியும் பேசியுள்ளார்.
வாரிசு படம்
வாரிசு படத்தில் எனக்கும் விஜய்க்கும் நிறைய எமோஷ்னலான காட்சிகள், மிகவும் அழகான உணர்வுப்பூர்வமான காட்சிகள் இருந்தது. படத்தில் விஜய்க்கும் எனக்கும் மட்டுமே சீன்கள் இருந்தது, வேறு எந்த நடிகருடன் காட்சிகள் இல்லை.
ஆனால் படத்தின் நீளம் அதிகமாக இருப்பதாக கூறி எனது காட்சிகளை நீக்குவதாக இயக்குனர் என்னை நேரில் சந்தித்து கூறினார். வாரிசு படத்தில் வசனங்களை விட எனக்கும் விஜய்க்கும் நிறைய சைலண்ட் ஷாட் தான் இருந்தது, குறிப்பாக நிறைய எமோஷ்னல் சீன் தான் இருந்தது.
படத்தின் படப்பிடிப்பின் அந்த சீன்களின் போதே நானும் விஜய்யும் உண்மையிலேயே அழுதுவிட்டோம்.
படம் ரிலீஸ் ஆன பிறகு நானும், விஜய்யும் சந்தித்தோம், அப்போது விஜய் உங்களுக்கும் எனக்கும் எவ்வளவு அழகான காட்சிகள் இருந்தது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த காட்சிகள் இல்லை என்பது வருத்தமாக உள்ளது என்று அவர் கூறியதாக குஷ்பு தெரிவித்தார்.