நடிகை நயன்தாரா கோலிவுட்டில் டாப் ஹீரோயின் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். அவர் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் பெறுகிறார்.
அவர் பிசியாக படங்களில் நடித்து வந்தாலும், சொந்தமாக காஸ்மெடிக்ஸ் நிறுவனத்தை தொடங்கி உலகத்தின் பல நாடுகளில் விற்பனை செய்து வருகிறார்.
அதற்கான ப்ரோமோஷனுக்காக இன்ஸ்டாவில் தொடர்ந்து பல வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். ஒரு காலத்தில் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு கூட வராமல் தவிர்த்துவந்த நயன்தாரா தற்போது தனது பிஸினஸுக்காக இன்ஸ்டா ரீல்ஸ் வெளியிடும் அளவுக்கு மாறி இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை கொடுத்து வருகிறது.
பிஸ்னஸ் பார்த்துக்கொள்வது இவர்தான்..
நயன்தாரா நடத்தி வரும் தொழில்களை நடத்தி வருவது விக்னேஷ் சிவன் தான் என பலரும் நினைக்கலாம். ஆனால் அவர் இல்லை, வேலுமணி என்பவர் தான் நயன்தாராவுக்கு தொழிலில் உதவி வருகிறாராம்.
தைரோகேர் என்ற நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் தான் வேலுமணி. அவர் சமூக வலைத்தளங்களிலும் பிரபலமான ஒருவர் தான்.
இந்த விஷயத்தை விக்னேஷ் சிவன் தற்போது இன்ஸ்டாவில் பதிவிட்டு அவருக்கு நன்றி கூறி இருக்கிறார். பதிவு இதோ..