வீர தீர சூரன்
நடிகர் விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன்.
சித்தா பட புகழ் அருண்குமார் இயக்கத்தில் விக்ரமுடன் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ், சித்திக் என பலர் நடித்துள்ளனர்.
ரூ. 50 முதல் ரூ- 55 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் கடந்த மார்ச் 27ம் தேதி பெரிய போராட்டத்திற்கு பிறகு வெளியாகி இருந்தது.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் இருந்தே நல்ல வசூல் வேட்டை நடத்தியுள்ள இப்படம் நாளுக்கு நாள் நல்ல கலெக்ஷன் செய்து வருகிறது.
தற்போது இப்படம் 6 நாள் முடிவில் மொத்தமாக ரூ. 35 கோடி வரை வசூலித்துள்ளதாம்.