இந்தியன் 2
உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிற 12ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் இந்தியன் 2.
இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படம் இதுவரை ப்ரீ புக்கிங்கில் மட்டுமே ரூ. 13 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாம்.
விக்ரம் பாணியில் இந்தியன் 2
இந்த நிலையில், இந்தியன் 2 படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த விக்ரம் படத்தில் எப்படி, இடைவேளை காட்சிக்கு முன் கமல் தோன்றுவாரோ, அதே போல் தான் இந்தியன் 2 திரைப்படத்திலும் இடைவேளை காட்சிக்கு முன் தான் கமல் ஹாசன் இந்தியன் தாத்தாவாக மாஸ் என்ட்ரி கொடுப்பாராம்.
அதுவரை மற்ற கதாபாத்திரங்கள் தான் இந்தியன் தாத்தா பற்றி பேசிக்கொண்டு இருக்கும் என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் இறுதியில் இந்தியன் 3காண மாஸ் ப்ரோமோ வீடியோ ஒன்றும் திரையிடப்படும் என்கின்றனர்.
இந்தியன் 3 திரைப்படத்தில் இந்தியன் தாத்தா சேனாபதியின் அப்பாவை பற்றி பேசப்படும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர். இது இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.