சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான். ஒரு தொடர் முடிவுக்கு வர அப்படியே அடுத்தடுத்த தொடர்களை தொடங்கிவிடுகிறார்கள்.
அப்படி அண்மையில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த எதிர்நீச்சல் தொடர் முடிவுக்கு வர அடுத்த வாரத்திலேயே மருமகள் என்ற தொடரை தொடங்கிவிட்டனர்.
அந்த தொடர் ஒளிபரப்பான முதல் வாரத்திலேயே செம டிஆர்பி ரேட்டிங் பெற்று 2வது இடத்தை பிடித்தது.
சிங்கப்பெண்ணே
தொடர் ஆரம்பித்த நாளில் இருந்து டிஆர்பியில் டாப்பில் அதாவது முதல் இடத்தில் இருக்கும் ஒரு தொடர் சிங்கப்பெண்ணே. கிராமத்தில் இருந்து சம்பாதிக்க சென்னை வரும் பெண்ணின் அன்றாட போராட்டத்தை பற்றி பேசுகிறது தொடர்.
அண்மையில் ஆனந்தியின் பிறந்தநாள் கொண்டாட்ட காட்சிகள் இடம்பெற்றன. இந்த நிலையில் இன்று வெளியான புரொமோவில், விசாரணை என்ற பெயரில் பெண் போலீஸ் ஆனந்தியை அழைத்து செல்கிறார்கள்.
இதுகேள்விப்பட்டு மகேஷ், அன்பு மற்றும் வாடர்ன் 3 பேரும் போலீஸ் நிலையம் சென்று ஆனந்தி பற்றி விசாரிக்கிறார்கள். ஆனால் இங்கு அப்படி யாருமே வரவில்லை என கான்ஸ்டபிள் கூற 3 பேரும் ஷாக் ஆகிறார்கள்.