நடிகர் சசிகுமார்
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ‘ஈசன்’ என்ற படத்தை இயக்கினார்.
பின், நடிப்பதில் கவனம் செலுத்த தொடங்கினார்.
ஜிப்ரான் இசையமைப்பில் கடைசியாக சசிகுமார் நடிப்பில் வெளியான படம் ‘நந்தன்’.
அந்த படத்தில் இதுவரை யாரும் பார்த்திராத தோற்றத்தில் சசிகுமார் நடித்துள்ளார். இவருடன் இணைந்து இந்த படத்தில் ஸ்ருதி பெரியசாமி, சமுத்திரக்கனி, பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சண்முக பாண்டியன் குறித்து சசிகுமார்
இந்த நிலையில், நேர்காணலில் சசிகுமார் விஜயகாந்த் மகன் குறித்து பேசியுள்ளார்.
அதில், “குற்றப்பரம்பரை நாவலைத் திரைப்படமாக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது.
அப்போது ஏற்கனவே, இந்த படத்தை இயக்கத் திட்டமிட்டிருந்த இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாலாவிடம் சென்று விஷயத்தை கூறினேன்.
அவர்களும் ஒப்புக்கொண்டனர். பிறகு, அந்த படத்தில் விஜயகாந்த்தின் மகனை நடிக்க வைக்க சம்மதம் பெற்றேன்.
அந்த படத்திற்காக சண்முக பாண்டியன் நீளமாக முடியை கூட வளர்த்தார். ஆனால், அந்த படம் எடுக்க தாமதமானதால் அவர் படைத்தலைவன் படத்தில் நடிக்க சென்றார்.
விஜயகாந்த் உயிருடன் இருக்கும்போது இந்த படத்தை இயக்க திட்டமிட்டேன் ஆனால் முடியவில்லை. சண்முக பாண்டியன் வைத்து கண்டிப்பாக ஒரு படம் இயக்குவேன்” என்று கூறியுள்ளார்.