GOAT
யுவன் ஷங்கர் ராஜா இசையில் பல ஆண்டுகள் கழித்து தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் GOAT. இப்படத்தை பிரபல முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.
இப்படத்தில் பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. செப்டம்பர் மாதம் இப்படம் வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வாக அறிவித்துவிட்டனர்.
GOAT திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா தனது சகோதரி பவதாரணியை பாடவைக்க முடிவு செய்துள்ளார். அந்த சமயத்தில் தான் பவதாரணிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. பின் அவர் இலங்கைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
பவதாரிணி
அங்கேயே அவருடைய உயிர் பிரிந்தது என்பதை நாம் அறிவோம். இவருடைய இறப்பு நம் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. தனது சகோதரியை GOAT படத்தில் ஒரே ஒரு பாடல் பாட வைக்க வேண்டும் என யுவன் நினைத்தார்.
ஆனால், அது முடியாமல் போன நிலையில், பவதாரணியின் குரலை AI மூலம் பயன்படுத்தி, GOAT படத்தில் மெலோடி பாடல் ஒன்றை பாட வைத்துள்ளார்களாம். இது கண்டிப்பாக ரசிகர்களின் மனதை தொடும் பாடலாக அமையும் என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் இந்த தகவலை கூறியுள்ளார்.