நட்சத்திரங்களின் அபார்ட்மெண்ட்
சென்னையில் உள்ள பட்டினம்பாக்கத்தில் பிரமாண்டமாக இருக்கும் அபார்ட்மெண்ட்டில் நடிகர் விஜய் வீடு வாங்கியுள்ள விஷயம் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகிறது.
அவர் மட்டுமின்றி திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களாக இருக்கும் துல்கர் சல்மான், ஆர்யா, சாய் பல்லவி, நிக்கி கல்ராணி மற்றும் ரம்பா உள்ளிட்டோரும் அங்கே வீடு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பின்னணி இதுதான்
சமீபத்தில் நடிகர் விஜய் பிரபல நடிகை ரம்பாவையும், அவர் குடும்பத்தினரையும் சந்தித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இவர்களுடைய சந்திப்பின் பின்னணி என்ன என்பது குறித்து பலரும் கேட்டு வந்தனர்.
விஜய் வாங்கியுள்ள அதே இடத்தில், அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு போர்ஷனை நடிகை ரம்பா வாங்கி குடி வந்திருக்கிறார். அப்போது தான் அவர் விஜய்யை சந்தித்துள்ளார். இதுதான் அந்த போட்டோவின் பின்னணி என கூறப்படுகிறது.