விஜய் சேதுபதி
மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தற்போது மகாராஜா எனும் திரைப்படம் உருவாகியுள்ளது.
நித்திலன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படம் ஆகும். இப்படத்தில் பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகரான அனுராக் கைஷப் வில்லனாக நடித்துள்ளார் என கூறப்படுகிறது.
மேலும் மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், அபிராமி உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்ட் ம்யூசிக்
இந்த நிலையில், மகாராஜா படத்தின் ப்ரோமோஷனுக்காக தற்போது விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றான ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் விஜய் சேதுபதி.
அந்த ப்ரோமோ வீடியோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளனர். இதோ அந்த வீடியோ பாருங்க..