கண்மணி அன்புடன்
மக்கள் தொடர்ந்து சீரியல்கள் பார்த்து அதில் மூழ்கி விடுகிறார்கள்.
அடுத்தடுத்து என்ன கதை என யோசிப்பதற்குள் டிஆர்பி குறைந்தால் உடனே சீரியலை எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் முடித்துவிடுகிறார்கள்.
இப்படி சில வருடங்களாக நிறைய தொடர்கள் அதிரடியாக முடிந்துவிடுகிறது. அப்படி சன், விஜய், ஜீ தமிழ் என அனைத்து தொலைக்காட்சியிலும் ஒரு தொடர் முடிய உடனே புதிய தொடர் களமிறங்கி விடுகிறது.
புதிய தொடர்
இந்த நிலையில் அதிரடியாக நேற்று விஜய் டிவியில் ஒரு புதிய தொடரின் புரொமோ வெளியாகி இருந்தது. கண்மணி அன்புடன், மழையில் இரண்டு தோழிகள் ஆட்டம் போடும் அழகான புரொமோ வெளியாகியுள்ளது.
அவர்கள் இருவரும் யார் என சரியாக தெரியவில்லை. டிஸ்டூடியோ தயாரிக்கும் இந்த தொடர் ஹிந்தியில் 2014ம் ஆண்டு Star Plus தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Suhani Si Ek Ladki என்ற தொடரின் ரீமேக் என்று கூறப்படுகிறது.