விஜய் டிவி
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ரியாலிட்டி ஷோக்கள் பல உள்ளன.
அதேபோல் தான் சீரியல்களும் உள்ளது, குடும்ப பாங்கான கதைகள், காதலை மையமாக கொண்ட தொடர் என பல ஜானரில் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
விரைவில் செல்லம்மா தொடர் முடிவுக்கு வர அன்புடன் கண்மணி என்ற தொடரும் புதியதாக தொடங்க உள்ளது. ஒரு தொடர் முடிவுக்கு வர உடனே புதிய சீரியல்களையும் இறக்குகிறார்கள் விஜய் டிவி.
மகா சங்கமம்
தற்போது விஜய் டிவி சீரியல்களில் நடக்கப்போகும் ஸ்பெஷல் விஷயம் பற்றி தெரிய வந்துள்ளது.
அதாவது படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களின் மகா சங்கமம் இடம்பெற இருப்பதாக ஒரு புகைப்படத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பாண்டியனின் பிறந்தநாள் வருகிறது, அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக மகா சங்கமம் நடக்க இருப்பதாக தெரிகிறது.
ஏற்கெனவே இந்த இரண்டு சீரியல்களின் மகா சங்கமம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.