Monday, September 16, 2024
Homeசினிமாவிஜய் நடித்து ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட்...

விஜய் நடித்து ரூ. 200 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்கள் என்னென்ன தெரியுமா.. லிஸ்ட் இதோ


நடிகர் விஜய்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தற்போது உச்சத்தில் ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் விஜய்.

ஒரு காலத்தில் பல கேலி கிண்டலுக்கு உள்ளான விஜய் இன்று பல ரசிகர்களை தனது நடிப்பு மூலம் சம்பாதித்து வைத்துள்ளார். தற்போது இவர் படங்கள் என்றாலே கண்டிப்பாக வசூலில் சாதனை படைக்கும் என்ற எண்ணம் அனைவரிடமும் தோன்றியுள்ளது.


அந்த வகையில், விஜய் நடித்து வசூலில் ரூ.200 கோடிக்கு மேல் அள்ளிய படங்கள் குறித்து கீழே காணலாம்.

வசூல் படங்கள்



இந்த வரிசையில் முதலில் லியோ ரூ. 225 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வெளிவந்து ரூ. 618 கோடி வரை வசூல் செய்துள்ளது.

அடுத்து, பிகில் இந்த படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ. 304 கோடி வசூல் செய்துள்ளது.

வாரிசு படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் எடுத்து ரூ. 303 கோடி வரை வசூல் செய்துள்ளது.

அதன் பின், மெர்சல் படம் ரூ.120 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ. 257 கோடி வசூல் செய்துள்ளது.


இந்த வரிசையில் அடுத்து இருப்பது சர்கார், இந்த படம் ரூ.120 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ. 253 கோடி வசூல் எடுத்துள்ளது.

மாஸ்டர் படம் ரூ.130 கோடி பட்ஜெட்டில் எடுத்து ரூ.243 கோடி வரை வசூலித்துள்ளது.

அடுத்து ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவான பீஸ்ட் படம் ரூ. 253 கோடி வசூல் செய்துள்ளது என கூறப்படுகிறது. இவை யாவும் அதிகாரபூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments