அருவி படம் மூலமாக அறிமுகம் ஆகி பெரிய அளவில் பிரபலம் ஆனவர் அதிதி பாலன். அதன் பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளில் நடிக்க தொடங்கிவிட்டார்.
சமீபத்தில் தெலுங்கில் நானியின் சூர்யா’ஸ் சாட்டர்டே படத்தில் அக்கா ரோலில் நடித்து இருந்தார் அவர்.
பீஸ்ட் படம் பார்த்து தூங்கிட்டேன்
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய நடிகை அதிதி பாலன் தான் விஜய்யின் பீஸ்ட் படம் பார்க்க சென்று கால் மணி நேரத்தில் படம் போகிற போக்கு பிடிக்காமல் தியேட்டரில் தூங்கிவிட்டேன் என கூறி இருக்கிறார்.
அவர் தூங்கியதை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்து வைத்து கலாய்த்தார்களாம்.