விடாமுயற்சி
அஜித் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார்.
லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அசர்பைஜானில் நேற்று துவங்கியது.
படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுத்த வீடியோக்கள் கூட வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
OTT
வருகிற தீபாவளி பண்டிகைக்கு வெளிவரவிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் OTT உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தை ரூ. 75 கோடி கொடுத்து தான் நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.