விடாமுயற்சி
மகிழ் திருமேனி – அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் வில்லனாக இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் ஆரவ், நடிகை ரெஜினா உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் தொடர்ந்து இப்படத்தில் நடித்து வரும் அனைத்து நடிகர் நடிகர்களின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.
அசர்பைஜானில் நடைபெற்று முடிந்த படப்பிடிப்பை தொடர்ந்து ஹைதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவு பெற்றுள்ளது. மேலும் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்க வேண்டுமாம். அதற்காக மீண்டும் அசர்பைஜான் செல்லப்போவதாக கூறப்படுகிறது.
படக்குழு வெளியிட்ட புகைப்படம்
இந்த நிலையில், ஹைதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்து, அங்கு அஜித்துடன் திரிஷா, ஆரவ், அர்ஜுன், ரெஜினா மற்றும் நிகில் நாயர் உள்ளிட்டோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..