Sunday, December 22, 2024
Homeசினிமாவிவாகரத்து பெரும் ஐஸ்வர்யா ராய், விளக்கம் அளித்த அபிஷேக் பச்சன்- என்ன சொன்னார் தெரியுமா?

விவாகரத்து பெரும் ஐஸ்வர்யா ராய், விளக்கம் அளித்த அபிஷேக் பச்சன்- என்ன சொன்னார் தெரியுமா?


ஐஸ்வர்யா

இந்தியாவிலிருந்து சென்று உலக அழகி பட்டத்தை வென்று மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஐஸ்வர்யா ராய்.

உலக அழகியாக இப்போதும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர் மணிரத்னம் இயக்கத்தில் இருவர் என்ற படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.

இவர் இந்தி சினிமாவில் கவனம் செலுத்தினாலும் அவ்வப்போது, தமிழ் சினிமாவிலும் நடித்திருப்பார்.

அப்படி அவர் நடித்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது.

ஐஸ்வர்யா ராய் கடைசியாக தமிழில் நடித்த படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் தன் நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வதந்தி

ஐஸ்வர்யா ராய் சினிமாவில் ஜொலித்தாலும், அவ்வப்போது தனிப்பட்ட வாழ்க்கையில் பல வதந்திகளுக்கு உள்ளாகிறார். இவர் அபிஷேக் பச்சன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெறவிருக்கிறார்கள் என்றும் வதந்திகள் தொடர்ந்து பரவி வந்தன.

விவாகரத்து பெரும் ஐஸ்வர்யா ராய், விளக்கம் அளித்த அபிஷேக் பச்சன்- என்ன சொன்னார் தெரியுமா? | Abhishek Bachchan Answer For Divorce Rumours


தற்போது, இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அபிஷேக் பச்சன் இதுகுறித்து விளக்கமளித்திருக்கிறார்.

அதில், எனக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விவாகரத்து என்று வெளியாகும் செய்தி முற்றிலும் பொய் எனவும் நாங்கள் மகிழ்ச்சியாக தான் வாழ்கிறோம் எனவும் நாங்கள் பிரபலங்கள் என்பதால் இப்படி அடிக்கடி வதந்திகளை பரப்புகிறார்கள் எனவும் கூறியுள்ளார். 

விவாகரத்து பெரும் ஐஸ்வர்யா ராய், விளக்கம் அளித்த அபிஷேக் பச்சன்- என்ன சொன்னார் தெரியுமா? | Abhishek Bachchan Answer For Divorce Rumours



RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments