தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் பார்த்திபன், நடிகராகவும் பல படங்களில் நடித்தும் பிரபலமானர். இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பின் புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகினார். இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வெற்றியை பார்த்து இயக்குனர் பார்த்திபன் இரவின் நிழல் படத்திற்கு பின் டீன்ஸ் என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். 1990ல் நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்த பார்த்திபன், மூன்று குழந்தைகளை பெற்றார்.
11 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சீதாவும் – பார்த்திபனும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்து பெற்று பிரிந்தாலும் இருவரும் பிள்ளைகளில் எதிர்காலத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சீதாவை விவாகரத்து செய்ய காரணம் என்ற உண்மையை கூறியிருக்கிறார்.
அதில், நான் காதலை முதன்முதலில் உணர்ந்தது சீதாவிடம் தான். இந்த காதல் எப்படிப்பட்ட காதல் என்றால், ”நான் இப்போது எந்த காரணத்தையும் கூறி எந்த உண்மையையும் மறைக்க அவசியம் இல்லை, காதலையும் கடந்துவிட்டோம், பொய்யையும் கடந்துவிட்டோம். நான் ரொம்ப சாதாரண ஆளாக இருக்கும் போது நீ ரொம்ப பெரிய ஆளாக வருவாய். முதல் படத்திலேயே வீடு, பங்க்ளான்னு வாங்குவ என்று ஒரு ஜோசியம் சொன்னது அந்த காதல். அது கொடுத்த உத்வேகம் யாரும் கொடுத்ததில்லை.
இப்போது விவாகரத்து என்று எல்லோரும் சொல்லும் போது, அது வேண்டாம் என்று நானே புரியாமல் அதை (விவாகரத்து) விரட்டிட்டு இருந்தேன். விவாகரத்து எல்லாம் வேண்டாம் எப்படியாவது சமாளித்துவிடலாம் என்று என் மனைவியிடம் கேட்டுட்டு இருந்தேன். இப்போது அப்பயெல்லாம் இருக்கக்கூடாது. முதலில் சீதாவை எப்படி புடிக்கும் என்றால், அவர்களை கல்யாணம் பண்ணிக்கக்கூடாது, பெரிய ஸ்டாராக வேண்டும் என்பதுதான்.
பின் அவர்களுக்கு நடிக்க பிடிக்கவில்லை, அதனால் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அதன்பின் அவங்க நடிக்க விருப்பப்படும் போது எனக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது, ஏனென்றால் இந்த குடும்பம் பிரிந்துவிடுமோ என்று தான். அப்போது நான் அவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன். இப்போது இருந்திருந்தால் யம்மா தாயே நீ ஷூட்டிங் போய்ட்டுவான்னு சொல்லியிருப்பேன். என் மனைவி என்மீது வைத்த காதல் உயிருக்கு மேலான காதல் என்று பார்த்திபன் கூறியிருக்கிறார்.