லப்பர் பந்து
தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமணன் குமார் தயாரிப்பில் உருவான திரைப்படம் லப்பர் பந்து.
ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சுவாசிகா விஜய், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் 20ம் தேதி வெளியான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளது, எனவே படக்குழுவும் வெற்றியை கொண்டாடிவிட்டார்கள்.
படத்தை பார்த்த வெற்றிமாறன், பா.ரஞ்சித், சிவகார்த்திகேயன், இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி போன்றவர்கள் படத்தை பாராட்டி இருந்தனர்.
பட வசூல்
நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை செய்துள்ள இப்படம் 11 நாள் முடிவில் இப்படம் ரூ. 20 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளது.
நல்ல கதைக்களத்தை கொண்டுள்ள இப்படம் வரும் நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்கின்றனர்.