சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சின்னத்திரை டூ வெள்ளித்திரை என சாதித்தவர்.
இப்போது உள்ள நடிகர்களில் படு பிஸியான நாயகனாக வலம் வருகிறார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி இணைந்து அமரன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படத்தை தொடர்ந்து முருகதாஸ் படம், சிபி சக்ரவர்த்தி படம் என தொடர்ந்து படங்கள் கமிட்டாகியுள்ளார்.
கியூட் போட்டோ
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு சினிமாவில் இருக்கும் பிரச்சனைக்கு இந்த துறையை விட்டுவிடலாம் என முடிவு செய்தேன்.
ஆனால் இது உனக்கு பிடித்த துறை போராடுங்கள் பாத்துக்கலாம் என மனைவி கொடுத்த நம்பிக்கையே நான் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு காரணம் என மனைவி குறித்து பெருமையாக பேசியிருந்தார்.
இந்த நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் வெளிநாட்டில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
அந்த போட்டோவை பார்த்த ரசிகர்களம் செம கியூட்டான ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.