வேட்டையன்
ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.
அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் பஹத் பாசில், ராணா, அமிதாப் பச்சன் என பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வழக்கம் போல் பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் இடையில் நடந்தது, அதில் ரஜினியின் பேச்சு அட்டகாசமாக இருந்தது.
இன்று ரஜினியின் வேட்டையன் பட டிரைலர் வெளியாக இருப்பதாக படக்குழுவும் அறிவித்துள்ளனர்.
ஃபஸ்ட் ரிலீஸ்
படத்தின் புரொமோஷன்கள் அட்டகாசமாக நடந்து முடிய ப்ரீ புக்கிங் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் நடக்கிறது.
தற்போது என்ன விஷயம் என்றால் வெளிநாட்டில் இதுவரை ரிலீஸ் ஆகாத ஒரு நாட்டில் ரஜினியின் முதல் படமாக வேட்டையன் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.
South Koreaவில் முதன்முறையாக ரஜினியின் படம் ரிலீஸ் ஆகிறதாம், வரும் அக்டோபர் 13ம் தேதி வேட்டையன் ரிலீஸ் ஆகிறதாம்.
#Vettaiyan 🦅 in SOUTH KOREA 🥁 pic.twitter.com/rLarJyVRqR
— 𝙎𝙄𝙑𝘼Ⓖ (@mrharichandrar1) October 1, 2024