ரஜினிகாந்த்
முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் கூலி. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நாகர்ஜுனா, ஷோபின் ஷபீர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று முடிந்தநிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னை, விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதிரடி அப்டேட்
இந்நிலையில், தற்போது கூலி படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, கூலி படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற உள்ளதாம்.
அதன் காரணமாக படக்குழுவினர் ஜெய்ப்பூர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அதை தொடர்ந்து, கூலி படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் அமீர்கானும் ஜெய்ப்பூரில் நடக்கும் படப்பிடிப்பில் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமின்றி ரஜினிகாந்தின் பிறந்தநாளான வருகிற 12- ம் தேதியில் கூலி படம் குறித்து முக்கிய அப்டேட்டுகள் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.