வேட்டையன்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் வேட்டையன். இப்படத்தை TJ ஞானவேல் இயக்கியுள்ளார்.
ஜெய் பீம் படத்திற்கு பின் TJ ஞானவேல் இயக்கும், இப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து துஷாரா விஜயன், அமிதாப் பச்சன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் தான் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், வேட்டையன் படத்தின் கலை இயக்குனராக பணிபுரிந்த கதிர் என்பவர் இப்படத்தின் கிளைமாக்ஸ் குறித்து சுவாரஸ்யமான தகவலை பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கிளைமாக்ஸ்
இதில் “படத்தில் இடைவேளை காட்சி பிரமாதமாக இருக்கும். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் என நாம் நம்புகிறேன். அதே போல் ரஜினிகாந்தின் என்ட்ரி காட்சியும் மாஸாக இருக்கும். மேலும் படத்தின் கிளைமாக்ஸ் ரொம்ப நல்லா வந்துருக்கு. பெரிய படத்திற்கு உண்டான கிளைமாக்ஸ் காட்சி எப்படி இருக்குமோ, அதே போல் இப்படத்திலும் இருக்கும். ஆனால், அந்த சண்டை எல்லாம் தாண்டி, வேட்டையன் படத்தின் இன்னும் வேறு விதமான கிளைமாக்ஸ் காட்சியை நீங்கள் பார்ப்பீர்கள்” என அவர் கூறியுள்ளார்.
வழக்கமான சண்டை காட்சியுடன் படத்தின் கிளைமாக்ஸ் இருக்காது, வித்தியாசமாக இருக்கும் என படத்தின் கலைஇயக்குனர் கதிர் கூறியுள்ளது, தற்போது படத்தின் மீது இருந்து எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது.