Wednesday, March 26, 2025
Homeசினிமாஷங்கர் மகனுக்கு ஜோடியும் 23 வயது சென்சேஷனல் நடிகை.. அட இவரா

ஷங்கர் மகனுக்கு ஜோடியும் 23 வயது சென்சேஷனல் நடிகை.. அட இவரா


ஷங்கரின் மகன் 

இயக்குநர் ஷங்கரின் வாரிசான அதிதி ஷங்கர் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்தார். இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், அதிதி ஷங்கரை தொடர்ந்து ஷங்கரின் மகனான அர்ஜித் ஷங்கரும் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து வரும் அர்ஜித் ஷங்கர், விரைவில் ஹீரோவாக களமிறங்கவுள்ளார்.

இயக்குநரும், நடிகருமான பிரபு தேவா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் தான் ஷங்கர் மகன் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில், தற்போது இப்படத்தின் ஹீரோயின் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

சென்சேஷனல் நடிகை

அதன்படி, இப்படத்தில் ஷங்கர் மகனுக்கு ஜோடியாக 23 வயது சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் பிஸியான இளம் நடிகையாக வலம் வரும் மமிதா பைஜூவின் லைன் அப்பில் தற்போது இந்த படமும் இணைந்துள்ளது. விரைவில் இப்படத்தின் அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர் மகனுக்கு ஜோடியும் 23 வயது சென்சேஷனல் நடிகை.. அட இவரா | Mamitha Baiju To Pair Up With Shankar Son Arjith

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments