Monday, March 31, 2025
Homeசினிமாஷாஜகான் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க

ஷாஜகான் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க


விஜய் 

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை முடித்த கையோடு முழுமையாக அரசியலில் களமிறங்கவுள்ளார்.

மேலும் இதுவே அவருடைய கடைசி படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விஜய் பல சூப்பர்ஹிட் காதல் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். அப்படி அவர் நடிப்பில் வெளிவந்த ப்ளாக் பஸ்டர் ஆன திரைப்படம் தான் ஷாஜகான்.

இப்படம் இன்று வரை ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அனைவரையும் கண்கலங்க வைத்துவிடுவார் விஜய்.

நடிகை ரிச்சா பல்லோட்

இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை ரிச்சா பல்லோட் (Richa Pallod). இவர் ஷாஜகான் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் பார்த்திபன் உடன் இணைந்து காதல் கிறுக்கன் படத்தில் நடித்திருந்தார். கடைசியாக ஆதி நடிப்பில் வெளிவந்த யாகாவாராயினும் நாகாக்க படத்தில் நடித்திருந்தார். இதன்பின் இவர் தமிழில் நடிக்கவில்லை.

ஷாஜகான் படத்தில் நடித்த இந்த நடிகையை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க | Shahjahan Movie Actress Richa Pallod Photos

கடந்த 2011ம் ஆண்டு Himanshu Bajaj என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில், நடிகை Richa Pallod-ன் சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதை பார்த்த பலரும், ஷாஜகான் படத்தில் நடித்த நடிகையா இவர் ஆளே மாறிவிட்டார் என கூறி வருகிறார்கள்.

இதோ நீங்களே பாருங்க..

GalleryGalleryGalleryGallery

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments