Friday, December 27, 2024
Homeசினிமாஹர்திக் பாண்டியாவை விவாகரத்து செய்த நடிகை நடாஷா! அவர் இந்த தமிழ் படத்தில் நடித்தவரா?

ஹர்திக் பாண்டியாவை விவாகரத்து செய்த நடிகை நடாஷா! அவர் இந்த தமிழ் படத்தில் நடித்தவரா?


பாலிவுட்டில் பல படங்களில் ஒரு பாடல்களுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடி பிரபலம் ஆனவர் நடாஷா. அவர் தமிழிலும் அரிமா நம்பி என்ற படத்தில் ‘நானும் உன்னில் பாதி’ என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருப்பார்.

மேலும் ஹிந்தி பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கும் நடாஷா பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.

விவாகரத்து

ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா இருவருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாகவும் அவர்கள் பிரிந்துவிட்டனர் என்றும் கடந்த பல மாதங்களாக செய்தி வந்து கொண்டிருந்தது.


ஐபிஎல்லில் சந்தித்த சர்ச்சைகள், உலக கோப்பை வென்றபோது கிடைத்த வரவேற்பு என ஹர்திக் பாண்டியா கெரியரில் ஏற்றதாழ்வுகளை சந்தித்து கொண்டிருந்த நிலையில், தற்போது விவாகரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கின்றார்.

இருவரும் சமரசமாக பிரிந்துவிட்டதாக தெரிவித்து இருக்கின்றனர். நடாஷா நேற்று அவரது சொந்த நாடான செர்பியாவுக்கு மகனை கூட்டி கொண்டு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஹர்திக் பாண்டியாவை விவாகரத்து செய்த நடிகை நடாஷா! அவர் இந்த தமிழ் படத்தில் நடித்தவரா? | Hardik Pandya And Natasa Announce Divorce

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments