சூர்யா கங்குவா படத்தை முடித்துவிட்டு, அடுத்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஒரு புது படத்தில் நடித்து வருகிறார்.
கங்குவா மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் ரசிகர்கள் அதன் ரிலீசுக்காக தான் காத்திருக்கின்றனர்.
தூம் 4
இந்நிலையில் சூர்யா அடுத்து ஹிந்தியில் சூப்பர்ஹிட் ஆன தூம் சீரிஸ் படங்களில் நடிக்க போகிறார் என தகவல் பரவி இருக்கிறது. விரைவில் தொடங்க இருக்கும் தூம் 4 படத்தில் அவர் வில்லனாக நடிக்க போகிறார் என கூறப்பட்டது.
ஆனால் விசாரித்ததில் அது உண்மை இல்லை என்றும், சூர்யாவை அந்த படக்குழுவினர் அணுகவே இல்லை என்பதும் தெரியவந்திருக்கிறது.