த்ரிஷா
இன்று தென்னிந்திய சினிமாவில் பிஸியான உச்ச நட்சத்திர நடிகையாக வலம் வருகிறார் த்ரிஷா. விஜய்யுடன் லியோ படத்தை முடித்த கையோடு, கோட் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடமாடினார்.
இதன்பின் அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் ஜோடியாக நடித்தது மட்டுமின்றி, தொடர்ந்து குட் பேட் அக்லி படத்திலும் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் கமல் – சிம்பு இணைந்து நடிக்கும் தக் லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஹீரோயின் ஆவதற்கு முன்
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் கலக்கிக்கொண்டிருக்கும் கதாநாயகியாக இருக்கும் த்ரிஷா, நடிக்க வருவதற்கு முன் மாடலின் செய்த வந்த சமயத்தில் எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகும்.
ஹீரோனாக சினிமாவில் என்ட்ரி கொடுப்பதற்கு முன் சேலை விளம்பரம் ஒன்றில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார். இதோ அந்த வீடியோ..
Once upon a time @trishtrashers ❤️ pic.twitter.com/1F4sHU4ghC
— குருவியார் (@Kuruviyaaroffl) October 14, 2024