இந்தியன் 2
கடந்த 12ஆம் தேதி வெளிவந்து விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்த திரைப்படம் இந்தியன் 2. கமல் ஹாசன் – ஷங்கர் கூட்டணியில் உருவான இப்படத்தின் மீது ரசிகர்கள் மாபெரும் எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.
ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக இப்படம் பூர்த்தி செய்யவில்லை. படத்தின் நீளம் தான் கலவையான விமர்சனங்களுக்கு காரணம் என்பதால், படத்திலிருந்து 11 நிமிட காட்சிகள் தூக்கப்பட்டது.
இந்தியன் 2 திரைப்படம் 10 நாட்களை கடந்து திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்க, இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வசூல்
அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என சொல்லப்படுகிறது.
இது இந்தியன் 2 திரைப்படத்திற்கு கிடைத்துள்ள, குறைவான வசூலாக பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படம் உலகளவில் எந்த அளவிற்கு வசூல் செய்யும் என்று.