டிராகன்
பிரதீப் ரங்கநாதன் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய இளம் ஹீரோவாக மாறிவிட்டார். லவ் டுடே படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் டிராகன் என்கிற ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறார்.
தனக்கென்று தனி மார்க்கெட் தென்னிந்திய அளவிலும், வெளிநாடுகளிலும் ஓப்பன் செய்துள்ளார். அதே போல் ஓ மை கடவுளே படத்தை தொடர்ந்து டிராகன் படத்தின் மூலம் தனது வெற்றியை தொடருகிறார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.
வசூல் சாதனை
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 21ம் தேதி வெளிவந்த இப்படம் முதல் நாளில் இருந்தே வசூலை அள்ளி வருகிறது. இப்படியிருக்க 10 நாட்களில் உலகளவில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, டிராகன் திரைப்படம் 10 நாட்கள் முடிவில் உலகளவில் ரூ. 105 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் தனது முந்தைய படமான லவ் டுடே படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை முறியடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். மேலும் இனி வரும் நாட்களிலும் இப்படத்திற்கான வசூல் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.