நடிகை சாய் பல்லவி பிரேமம் என்ற படத்தில் மலர் டீச்சராக நடித்து பாப்புலர் ஆனவர். அவரது லுக், எதார்த்த நடிப்பு, டான்ஸ் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது.
தமிழ், தெலுங்கை தாண்டி தற்போது ஹிந்தியிலும் சாய் பல்லவி நடிக்க தொடங்கி இருக்கிறார். அவர் ரன்பீர் கபூர் உடன் ராமாயணம் படத்தில் நடித்து வருகிறார். அவர் அதில் சீதையாக நடித்து வருகிறார்.
10 வருட காதல்
சாய் பல்லவி தற்போது தனது காதல் பற்றி ஒரு நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார்.
“நான் 10 வருடமாக ஒருவரை காதலித்து வருகிறேன். அபிமன்யு என்ற கதாபாத்திரத்தை தான் காதலித்து வருகிறேன். மகாபாரதம் கதையில் வரும் அர்ஜுனனின் மகன் அபிமன்யு தான் அவர்” என சாய் பல்லவி கூறி இருக்கிறார்.