கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் மலையாளத்தில் வெளிவந்த கீதாஞ்சலி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் தமிழில் விஜய் இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் படத்தில் என்ட்ரி கொடுத்தார்.
தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளில் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்தார். மேலும் தெலுங்கில் வெளிவந்த மகாநட்டி திரைப்படத்திற்காக சிறந்த நடிகை என்கிற தேசிய விருதையும் கைப்பற்றினார்.
ரஜினிகாந்த், விஜய், சூர்யா என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார். அட்லீ தயாரிப்பில் வருண் தவான் நடிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் டிசம்பர் மாதம் வெளியாகிறது.
கீர்த்தி சுரேஷ் கொடுத்த பரிசு
இந்த நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் சினிமாவில் நடிக்க துவங்கி 10 ஆண்டுகளை கடந்துள்ளார். இதற்காக தன்னை வைத்து இதுவரை படங்களை தயாரிக்க அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் கடிதம் எழுதி சிறப்பான பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளாராம் கீர்த்தி.
இதுவரை சினிமா துறையில் யாருமே இப்படி செய்தது இல்லை என சொல்லப்படுகிறது. இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.