கல்கி
கல்கி திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் வெளிவந்தது. பிரமாண்ட பொருட்செலவில் உருவான இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார்.
பிரபாஸ், கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல இப்படத்தில் நடித்துள்ளனர். முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் மாபெரும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
வசூல்
இந்த நிலையில், 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கல்கி திரைப்படத்தின் வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இதுவரை உலகளவில் ரூ. 805 கோடி வரை வசூல் செய்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 31 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது இப்படத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மாபெரும் வசூல் என பார்க்கப்படுகிறது.