டாப் நடிகர்கள்
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, நடிகர்களின் சம்பளம் லட்சங்களில் தொடங்கி சில கோடிகள் வரை தான் இருந்தது.
ஆனால் தற்போது தமிழில் முன்னணி நடிகர்களாக வலம்வரும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்கள் ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர்.
அதே போல் பாலிவுட்டிலும் ஷாருக்கான், சல்மான் கான், அமீர் கான் உள்ளிட்டோர் ரூ. 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர்.
படங்கள் மட்டும் இல்லாமல் விளம்பரங்கள் மூலம் பாலிவுட் நடிகர்கள் கோடிகளில் சம்பாதிக்கின்றனர்.
இதன் மூலம், இவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது. அப்படி அதிக சொத்துக்களுடன் வலம்வரும் டாப்-5 பணக்கார நடிகர்கள் குறித்து பார்க்கலாம்.
ஷாருக்கான் :
முதலில் இந்த பட்டியலில் இருப்பவர் நடிகர் ஷாருக்கான் தான். அவரின் மொத்த சொத்து மதிப்பு ரூ.6300 கோடி என்று கூறப்படுகிறது. ஷாருக்கான ஒரு படத்திற்கு ரூ.150 முதல் ரூ.250 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
சல்மான் கான்:
இந்த பட்டியலில் நடிகர் சல்மான் கான் 2-வது இடத்தில் இருக்கிறார். இவர் ஒரு படத்திற்கு ரூ.100 முதல் 150 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். சல்மான் கானின் சொத்து மதிப்பு ரூ.2900 கோடி என்று கூறப்படுகிறது.
அக்ஷய் குமார்:
மூன்றாவது இடத்தில் இருப்பவர் அக்ஷய் குமார். இவர் ஒரு படத்திற்கு ரூ.60 கோடி முதல் ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அவரின் சொத்து மதிப்பு ரூ.2500 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அமீர்கான்:
அமீர்கான் இந்த பட்டியலில் 4-வது இடத்தில் இருக்கிறார். அவர் ஒரு படத்திற்கு ரூ.100 முதல் ரூ.250 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று தகவல் வெளியானது. அமீர் கானின் மொத்த சொத்து மதிப்பு ரூ.1862 கோடி என்று கூறப்படுகிறது.
விஜய் :
நடிகர் விஜய் பணக்கார நடிகர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் இருக்கிறார். இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்பதால் அவர் ஒரு படத்திற்கு ரூ. 150 முதல் ரூ.250 கோடி வரை சம்பளம் பெறுகிறார். விஜய்யின் சொத்து மதிப்பு ரூ.474 கோடி என்று கூறப்படுகிறது.