மகாராஜா
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஹீரோவாக மாபெரும் ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்தது மகாராஜா. இதன்மூலம் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார் விஜய் சேதுபதி என ரசிகர்களால் கூறப்படுகிறது.
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பாலிவுட் இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப் நடித்திருந்தார். இருவருக்கும் இடையிலான காட்சிகள் மிரட்டலான முறையில் இருந்தது.
மேலும் நட்டி நட்ராஜ், அபிராமி, மம்தா மோகன்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், சிங்கம் புலி, முனீஸ்காந்த், அருள்தாஸ் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். பாக்ஸ் ஆபிஸில் படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர்.
OTT ரிலீஸ்
இந்த நிலையில், திரையரங்கில் மாபெரும் வெற்றியை ருசித்த மகாராஜா திரைப்படம் வருகிற ஜூலை 12ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. இதனை ட்ரைலருடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Maharaja veetlandhu Lakshmi ah thiruditanga. Thannoda Lakshmi ah thirumbi konduvara evlo dhoorom povaru?#Maharaja is coming to Netflix on 12th July in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi! pic.twitter.com/8GTpgF3274
— Netflix India South (@Netflix_INSouth) July 8, 2024