ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குனர் TJ ஞாயவேல் இயக்கியுள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.
இதை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் முதல் துவங்குகிறது. இந்த நிலையில், ரஜினியின் அடுத்த திரைப்படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்து ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்த திரைப்படம் ஜவான். இப்படத்தை தொடர்ந்து அட்லீ நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்கவிருந்தார். ஆனால், அப்படத்திலிருந்து திடீரென அல்லு அர்ஜுன் விலகிவிட்டாராம்.
மாஸ் கூட்டணி
இந்த நிலையில், அட்லீ அடுத்ததாக பாலிவுட் கதாநாயகன் சல்மான் கானை வைத்து தான் இயக்கப்போகிறார் என கூறப்படுகிறது. மேலும் இது மல்டி ஸ்டாரர் படம் என்றும், இதில் சல்மான் கானுடன் இணைந்து மற்றொரு முன்னணி நடிகர் நடிக்கவுள்ளார் என தகவல் வெளிவந்தது.
அது வேறு யாருமில்லை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் என கூறுகின்றனர். ஆம், சல்மான் கான் – அட்லீ கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
இது ரஜினியின் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
பொறுத்திருந்து பார்ப்போம் அட்லீ – சல்மான் கான் – ரஜினி கூட்டணியில் உருவாகவுள்ள படம் குறித்து எப்போது அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகிறது என்று.